பொருளாதார சரிவும் தமிழனின் அறிவும் :
மைக்ரோசாப்ட் ஐரோப் தலைவரை தேர்ந்தெடுக்க பில் கேட்ஸ் ஏற்பாடு செய்திருந்த வேலை வாய்ப்பு கருத்தரங்கில் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்டனர், அதில் நம் ராமசாமியும் ஒருவர்.
பில்: அனைவரின் வருகைக்கு நன்றி. ஜாவா தெரியாதவர்கள் அனைவரும் வெளியேறலாம்.
இரண்டு ஆயிரம் பேர் வெளி ஏறினர்.
நம் ராமசாமி தனக்குள் "நமக்கு ஜாவா தெரியாது, சரி நடப்பது நடக்கட்டும், உள்ளே இருப்பதால் என்ன பெரிய நஷ்டம், இருந்து தான் பார்ப்போமே" என்று நினைத்து கொண்டார்.
பில்: நூறு பேருக்கு மேல் மேலாண்மை செய்யாதவர்கள் எல்லாம் வெளிய செல்லவும்.
மீண்டும் இரண்டு ஆயிரம் பேர் வெளி ஏறினர்.
நம் ராமசாமி தனக்குள் "நாம நம்மள மேய்ப்பதே பெரிய வேலை, சரி நடப்பது நடக்கட்டும், உள்ளே இருப்பதால் என்ன பெரிய நஷ்டம், இருந்து தான் பார்ப்போமே" என்று நினைத்து கொண்டார்
பில்: மேலாண்மை கல்வி தகுதி இல்லாதவர்கள் அனைவரும் வெளிய செல்லவும்.
ஐந்நூறு பேர் வெளி ஏறினர்.
நம் ராமசாமி தனக்குள் " நாம பத்தாம் வகுப்பே தாண்டலே இதேலே மேலாண்மை படிபிற்க்கு எங்க செல்வது சரி நடப்பது நடக்கட்டும் உள்ளே இருப்பதால் என்ன பெரிய நஷ்டம், இருந்து தான் பார்ப்போமே" என்று நினைத்து கொண்டார்.
கடைசியாக பில்: செர்பிய மொழி தெரியாதவர்கள் வெளிய செல்லவும்.
இருவரை தவிர அனைவரும் வெளிய சென்றனர்.
அதில் ஒருவரான நம் ராமசாமி தனக்குள் " நாம தமிழ்க்கே தாளம் போடுவோம், சரி நடப்பது நடக்கட்டும், உள்ளே இருப்பதால் என்ன பெரிய நஷ்டம், இருந்து தான் பார்ப்போமே" என்று நினைத்து கொண்டார்.
பில்: மிக்க மகிழ்ச்சி, உங்கள் இருவருக்கும் நான் எதிர் பார்த்த அத்துணை தகுதிகளும் உள்ளன. எனக்கு செர்பிய மொழி தெரியாது, எனவே நீங்கள் இருவரும் செர்பிய மொழியில் பேசுவதை கேட்பதற்கு எனக்கு மிகுந்த ஆவல்.
மெதுவாக ராமசாமி இன்னொரு போட்டியாளரை பார்த்து எந்த ஊரு நீங்க?? என்றார்.
அந்த போட்டியாளர் மெதுவாக திருநெல்வேலி பக்கம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment