Thursday, May 13, 2010

அகில உலக இந்திய திரைப்பட விருது விழா

அது என்னமோ தெரியலை இந்த பாலிவுட் சினிமா காரங்களுக்கு மத்த மாநில சினிமாவை பார்த்த இளப்பம் போலே. இந்தியானு பேரு வெச்சா எல்லா மொழிகளில் இருந்தும் படங்கள் திரை இடனும், இல்லேனா ஹிந்தி சினிமான்னு சொல்லணும், ரெண்டும் இல்லாம இப்படி செய்றதாலே இந்திய சினிமாவ பத்தி தெரியாதவங்க பாலிவுட் தான் இந்திய சினிமா என்று நினைகிறார்கள்.

அது போக இப்போ அது கொழும்புல நடத்தனும்னு யாரு அழுதா? கூண்டுக்குள் அவதிப்படும் தமிழர்களுக்கு இந்தியர்கள் செய்யும் மிக பெரிய உதவி தான் இந்த விழா.

Sunday, October 4, 2009

பொருளாதார சரிவும் தமிழனின் அறிவும் :

மைக்ரோசாப்ட் ஐரோப் தலைவரை தேர்ந்தெடுக்க பில் கேட்ஸ் ஏற்பாடு செய்திருந்த வேலை வாய்ப்பு கருத்தரங்கில் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்டனர், அதில் நம் ராமசாமியும் ஒருவர்.

பில்: அனைவரின் வருகைக்கு நன்றி. ஜாவா தெரியாதவர்கள் அனைவரும் வெளியேறலாம்.

இரண்டு ஆயிரம் பேர் வெளி ஏறினர்.

நம் ராமசாமி தனக்குள் "நமக்கு ஜாவா தெரியாது, சரி நடப்பது நடக்கட்டும், உள்ளே இருப்பதால் என்ன பெரிய நஷ்டம், இருந்து தான் பார்ப்போமே" என்று நினைத்து கொண்டார்.

பில்: நூறு பேருக்கு மேல் மேலாண்மை செய்யாதவர்கள் எல்லாம் வெளிய செல்லவும்.

மீண்டும் இரண்டு ஆயிரம் பேர் வெளி ஏறினர்.

நம் ராமசாமி தனக்குள் "நாம நம்மள மேய்ப்பதே பெரிய வேலை, சரி நடப்பது நடக்கட்டும், உள்ளே இருப்பதால் என்ன பெரிய நஷ்டம், இருந்து தான் பார்ப்போமே" என்று நினைத்து கொண்டார்

பில்: மேலாண்மை கல்வி தகுதி இல்லாதவர்கள் அனைவரும் வெளிய செல்லவும்.

ஐந்நூறு பேர் வெளி ஏறினர்.

நம் ராமசாமி தனக்குள் " நாம பத்தாம் வகுப்பே தாண்டலே இதேலே மேலாண்மை படிபிற்க்கு எங்க செல்வது சரி நடப்பது நடக்கட்டும் உள்ளே இருப்பதால் என்ன பெரிய நஷ்டம், இருந்து தான் பார்ப்போமே" என்று நினைத்து கொண்டார்.

கடைசியாக பில்: செர்பிய மொழி தெரியாதவர்கள் வெளிய செல்லவும்.

இருவரை தவிர அனைவரும் வெளிய சென்றனர்.

அதில் ஒருவரான நம் ராமசாமி தனக்குள் " நாம தமிழ்க்கே தாளம் போடுவோம், சரி நடப்பது நடக்கட்டும், உள்ளே இருப்பதால் என்ன பெரிய நஷ்டம், இருந்து தான் பார்ப்போமே" என்று நினைத்து கொண்டார்.

பில்: மிக்க மகிழ்ச்சி, உங்கள் இருவருக்கும் நான் எதிர் பார்த்த அத்துணை தகுதிகளும் உள்ளன. எனக்கு செர்பிய மொழி தெரியாது, எனவே நீங்கள் இருவரும் செர்பிய மொழியில் பேசுவதை கேட்பதற்கு எனக்கு மிகுந்த ஆவல்.

மெதுவாக ராமசாமி இன்னொரு போட்டியாளரை பார்த்து எந்த ஊரு நீங்க?? என்றார்.

அந்த போட்டியாளர் மெதுவாக திருநெல்வேலி பக்கம் என்றார்.

Friday, October 2, 2009

இந்து ந.ராம் இந்தியனா?

இந்து ந.ராம் இந்தியனா?

இன்றைய இந்து பதிப்பில் வெளியான செய்தியில் அவரது சீன பற்று தெளிவாக தெரிகிறது.

"China celebrated the 60th birthday of the People’s Republic in magnificent style, parading its new high-tech military prowess and showcasing its post-1978 economic development and its rapid rise on the world stage in a 150-minute Tian’anmen event that did not neglect to refer back to 20th century revolutionary history. In the process, it sent out a clear message that while the country is strong and determined enough to use all its resources to protect its interests — beginning with the “one China” imperative — what it wants above all is an internal and external environment conducive to development and the improvement of the lives of 1.3 billion people."


இந்த்திய-திபெத் எல்லையில் நடந்துவரும் சீன கண்ணாமூச்சி விளையாட்டு மக்களிடம் பெரும் அதிருப்தியை வெளி கொண்டுவந்திருக்கும் வேளையிலே இது போன்ற செய்திகள் அவசியம் தானா?

ஒரே சீனாவில் ஆக்ரிமிக்கப்பட்ட திபெத்தும், இந்தியாவிலுள்ள அருணாச்சல், காஷ்மிரின் அக்சாய் சின் மற்றும் தைவான் போன்ற பகுதிகள் அடக்கம்.இது ந.ராம்க்கு தெரியாமலா இருக்கும்??

Wednesday, September 30, 2009

நான் ஒரு தடவே சொன்ன நூறு தடவெ சொன்ன மாதிரி